“நாங்க எப்படி வர முடியும்..?” காலை உணவுத் திட்டத்தில் புதிய சிக்கல்..! அரசு எடுத்த முடிவால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாங்க எப்படி வர முடியும்..?” காலை உணவுத் திட்டத்தில் புதிய சிக்கல்..! அரசு எடுத்த முடிவால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி..!!

Published

on

காலை உணவுத் திட்டத்தைக் கண்காணிக்க தினமும் ஒரு ஆசிரியர் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பிற்குத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையில், சில ஆசிரியர்கள் 30 முதல் 40 கி.மீ தொலைவிலிருந்து தினமும் பயணித்து வருவதால், காலை 7 மணிக்கே பள்ளிக்கு வரும் அறிவிப்பை நடைமுறைப்படுத்துவது மிகவும் சிரமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களுக்குச் சிரமம் அளிக்கும் இந்த உத்தரவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in