LATEST NEWS
“அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..” கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் கடன் வரம்பு ரூ.35 லட்சமாக உயர்வு.. உடனே ஷேர் பண்ணுங்க..!!
பணியாளர் கூட்டுறவு வங்கிகளில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தி அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையானது அதிகபட்சம் ரூ.35 லட்சம் அல்லது அவர்களின் மொத்த ஊதியத்தின் 25 மடங்கு – இதில் எது குறைவாக உள்ளதோ, அந்தத் தொகை கடனாக வழங்கப்படும்.
மேலும், கடன் வழங்குவதற்கான சில முக்கிய விதிகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அனுமதிக்கப்படும் கடன் தொகையில் 5 சதவீத தொகை பங்குத்தொகையாக வசூலிக்கப்படும் என்பது உள்ளிட்ட நடைமுறைகளும் இந்த அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
