திக் திக் திக்.. கேட்டை மூடிய ஊழியர்கள்… தண்டவாளத்தில் சிக்கிய கார்… சீறிப்பாய்ந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

திக் திக் திக்.. கேட்டை மூடிய ஊழியர்கள்… தண்டவாளத்தில் சிக்கிய கார்… சீறிப்பாய்ந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமில் உள்ள பஞ்ச்லி-செஜாவா பைபாஸ் பகுதியில் உள்ள ரயில்வே கேட் எண் 192-ல் ஒரு பெரும் ரயில் விபத்து அரங்கேறியுள்ளது. கார் ஒன்று ரயில்வே டிராக்கைக் கடக்க முயன்றபோது, அங்குப் பணியில் இருந்த ஊழியர்கள் திடீரென கேட்டை மூடியுள்ளனர். இதனால் எங்கும் நகர முடியாமல் அந்தக் கார் தண்டவாளத்தின் நடுவிலேயே மாட்டிக் கொண்டது. அதே நேரத்தில் அந்தத் தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த வல்சாத் – ஹிசார் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் நின்ற காரின் மீது பயங்கரமாக மோதியது.

காரில் இருந்த பயணிகள் ரயில் வருவதை முன்கூட்டியே கவனித்து, காரை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், காரைத் தூரத்திலிருந்து கவனித்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலின் வேகத்தைக் குறைத்ததால் காரில் இருந்தவர்கள் மற்றும் ரயிலில் இருந்த பயணிகள் நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர். பின்னர், கிரேன் உதவியுடன் தண்டவாளத்தில் இருந்து கார் அகற்றப்பட்டது. ரயில்வே கேட் ஊழியர்களின் கடுமையான அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in