LATEST NEWS
அய்யோ என்னாச்சு..? நடுரோட்டில் துடிதுடித்து விழுந்த முதியவர்… பதறியடித்து ஓடிவந்து உயிரை காப்பாற்றிய காவலர்..! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ரஹீம்நகர் காவல் நிலையத்தில் சந்தீப் யாதவ் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் சரிந்து மயங்கி விழுவதைப் பார்த்தார். இதையடுத்து காவலர் சந்தீப் துரிதமாக செயல்பட்டு, முதியவருக்கு இதய நுரையீரல் புத்துயிரூட்டல் சிகிச்சை அளித்தார்.
இதைத் தொடர்ந்து சரியான நேரத்தில் முதியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் வசதியையும் காவலர் ஏற்பாடு செய்தார். காவலர் சந்தீப் முதியவருக்கு இதய முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.
இதையடுத்து காவலரைப் பாராட்டும் வகையில் பாராட்டுச் சான்றிதழ் ஒன்றை வழங்கி லக்னோ காவல்துறை ஆணையர் தருண் கபா கௌரவித்தார். மேலும் இந்தச் செய்தியைப் பகிர்ந்த லக்னோ காவல்துறை, சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கையும், முறையான பயிற்சியும் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற எப்படி உதவும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
