LATEST NEWS
BREAKING:மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்..! இனி தினமும் P.E.T வகுப்புகள்… தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!
பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாள்கள் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இதற்கான பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், உடல் கல்வி வகுப்புகளை ஆசிரியர்கள் எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யக்கூடாது என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கையானது மாணவர்களின் உடல் மற்றும் மன திறன்களை மேம்படுத்தி, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
