LATEST NEWS
“தாய் மீது ஆணையா சொல்றேன்…” மேடையில் சத்தியபாமா காதில் சொன்னது இதுதான்… அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!!
பிரசாரத்தின்போது சத்தியபாமா காதில் சொன்னது என்ன என்பது பற்றி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். மேடையில் அவர் கண்ணீருடன் பேசியபோது ராஜ்மோகனுக்கு போன் வந்தது. உடனே சத்தியபாமா அருகில் சென்று ஏதோ கூற, அவர் அடுத்த சில நிமிடங்களில் உரையை நிறுத்தினார்.
இந்நிலையில், தாய் மீது ஆணையாக நேரமில்லாமையால் உரையை சீக்கிரமாக முடிக்கச் சொன்னேன் என ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். இந்தச் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த விளக்கம் தற்போது வெளியாகி உள்ளது.
