LATEST NEWS
“சிக்கன் பிரியாணி கிடைக்கும் வரை அது கிடையாது” – அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி சபதம்.. போட்டுடைத்த லயோலா மணி..!!
அரசுப் பள்ளி மாணவர்களின் மதிய உணவில் சிக்கன் பிரியாணி சேர்க்கப்படும் வரை தாம் அசைவ உணவுகளை உட்கொள்ளப் போவதில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தீவிர சபதம் எடுத்துள்ளதாகத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். தீவிர அசைவப் பிரியரான அமைச்சர், முதலமைச்சர் விஜய் எந்நாளில் இந்தத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறாரோ, அதுவரை சைவ உணவை மட்டுமே உட்கொள்வது என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக லயோலா மணி மூலமாகத் தனக்கு ரூ. 5 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் பேரம் பேசியதாக அமைச்சர் ராஜ்மோகன் அண்மையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. லஞ்சம் கொடுக்க முன்வந்த அந்த நபர் யார் என்பதை பகிரங்கப்படுத்தி, அவர் மீது அமைச்சரும் லயோலா மணியும் ஏன் இன்னும் லஞ்ச ஒழிப்புத் துறையில் (DVAC) புகார் அளிக்கவில்லை என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இந்த இக்கட்டான அரசியல் சூழலில், 5 கோடி ரூபாய் லஞ்சப் பேரம் குறித்த தீவிர விவாதங்களைத் திசைதிருப்புவதற்காகவே சிக்கன் பிரியாணி சபதம் மற்றும் விரதம் போன்ற கருத்துக்களை லயோலா மணி மேடையில் பேசியுள்ளார் என நெட்டிசன்களும் எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். அமைச்சராக இருக்கும் அவரே முதலமைச்சரிடம் பேசி இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியும் என்ற நிலையில், இது வெறும் விளம்பர அரசியல் நாடகம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
