“தூக்க போறாங்க CM சார்..” தவெக MLA-க்களை குறிவைக்கும் திமுக.. ரகுபதியின் அதிரடி பேச்சால் தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்.? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தூக்க போறாங்க CM சார்..” தவெக MLA-க்களை குறிவைக்கும் திமுக.. ரகுபதியின் அதிரடி பேச்சால் தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்.?

Published

on

தமிழக அரசியலில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் மறைமுக வேலைகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் பரவலாகக் குற்றம் சாட்டுகின்றனர். அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத்தில் சுமார் 60 முதல் 70 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதைய தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகப் பேசியுள்ளார். எதிர்க்கட்சியான திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் ஆளுங்கட்சியின் உட்கட்சிப் பூசலை இந்தளவுக்கு வெளிப்படையாகப் பேசியிருப்பது, விமர்சகர்களின் சந்தேகத்திற்கு மிக வலுவான சான்றாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே, தவெக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் அதன் 25 சட்டமன்ற உறுப்பினர்களைத் திரட்டி அரசுக்கு எதிராகத் திருப்ப திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்திருந்தன. இந்தச் சூழலில், “அதிருப்தியில் உள்ள தவெக MLA-க்கள் நினைத்தால் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கூட கொண்டு வரலாம்” என்று ரகுபதி கொளுத்திப் போட்டுள்ள பேச்சு, தவெக சட்டமன்ற உறுப்பினர்களைப் பிரிக்க திமுக திரைமறைவில் நடத்தும் ஆபரேஷனுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement

நவம்பர் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரிய அளவிலான அதிரடி மாற்றங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். தவெக சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைக்க அக்கட்சியின் தலைமை தீவிரமான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், ரகுபதியின் இந்த அதிரடிப் பேச்சு தவெக கூடாரத்திற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் எழுமா அல்லது திமுகவின் இந்த அரசியல் நகர்வுகளைத் தவெக முறியடிக்குமா என்பது வரும் நாட்களிலேயே முழுமையாகத் தெரியவரும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in