LATEST NEWS
“கொரோனா போயி எத்தனையோ வருஷம் ஆச்சு… இன்னும் எதுக்கு இந்தத் தடை..?” ஐ.சி.சி.-யை நேரடியாகக் கேள்வி கேட்ட ஷுப்மன் கில்..!!
கிரிக்கெட் பந்தைச் சுவைத்துப் பளபளப்பாக்க எச்சிலைப் பயன்படுத்துவதற்கு ஐ.சி.சி. விதித்துள்ள தடையை ஏன் இன்னும் தொடர வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கேள்வி எழுப்பியுள்ளார். “எச்சில் பயன்படுத்த ஏன் இன்னும் தடை?” என்ற அவரது கேள்வி தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
COVID-19 பெருந்தொற்று முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இந்தத் தடையை ஐ.சி.சி. நீடிக்கக் காரணம் என்ன என்பது குறித்து அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த பிறகு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஷுப்மன் கில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
