LATEST NEWS
பதவிக்கு ரூ. 5 கோடி லஞ்சம்..? 500 கோடி கொடுத்தாலும் முதலமைச்சர் தரமாட்டார்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி..!!
தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்காக தனக்கு ரூ. 5 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் முயன்றதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுவரை இந்தத் தகவலைத் தான் வெளியில் சொல்லவில்லை என்றும், தனது தம்பி லயோலா மணிக்கு மட்டும்தான் இது தெரியும் என்றும் அவர் பொதுமேடையில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதவிக்குத் தகுதியற்ற ஒருவர் தனக்கு ரூ. 5 கோடி தருவதாகக் கூறியதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “ரூ. 500 கோடி கொடுத்தாலும் பொருத்தமில்லாதவருக்கு முதலமைச்சர் விஜய் இந்த முக்கியமான பொறுப்பைத் தரமாட்டார்” என்று திட்டவட்டமாகக் கூறி லஞ்சத்தை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் துறைக்கு முற்றிலும் தகுதியான நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமிக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்தப் பதவியை முதலமைச்சர் வழங்கச் சொல்லியுள்ளார் எனத் தான் திருப்பி அனுப்பியதாக அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார்.
