“குழந்தை விழுங்காது.. ஆனா திமுகவினரை மட்டும் பக்கத்துல விடாதீங்க..!” அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி இரட்டை அர்த்த பதிலடி.. அரசியல் வட்டாரத்தில் பரவும் புது சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குழந்தை விழுங்காது.. ஆனா திமுகவினரை மட்டும் பக்கத்துல விடாதீங்க..!” அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி இரட்டை அர்த்த பதிலடி.. அரசியல் வட்டாரத்தில் பரவும் புது சர்ச்சை..!!

Published

on

தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை விமர்சித்து வரும் திமுகவினருக்கு, தவெக பேச்சாளரும் ஊடகவியலாளருமான ராஜ்மோகன் தனது பாணியில் நகைச்சுவையாகவும் காரசாரமாகவும் பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தவெக பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “பிறந்த குழந்தைக்குத் தாய்மாமன் முறையில் தங்க மோதிரம் அணிவித்தால், அந்தக் குழந்தை அதை விழுங்கிவிடாதா? என்று திமுகவினர் தங்களை மிகப்பெரிய அறிவாளிகளாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகிறார்கள்; குழந்தைகள் ஒருபோதும் மோதிரத்தை விழுங்காது” என்று நிதர்சனத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும் திமுகவினரை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசிய ராஜ்மோகன், “பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை; திமுகவினரை மட்டும் குழந்தைகள் மற்றும் அந்தத் தங்க மோதிரத்தின் அருகில் விடாமல் இருந்தாலே போதும், அந்த மோதிரத்தை வேறு யாரும் விழுங்க மாட்டார்கள்” என்று இரட்டை அர்த்தத்தில் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். தவெக-வின் இந்த புதிய மக்கள் நலத்திட்டத்தை ஆளுங்கட்சியினர் மேடைகளில் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு ராஜ்மோகன் கொடுத்துள்ள இந்த கவுண்டர் பதிலடி தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in