பகீர்..! கணவரைக் கொன்று உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி வைத்துவிட்டு… தப்பித்து ஓடிய மனைவி… நடந்தது என்ன..? திடுக்கிடும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! கணவரைக் கொன்று உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி வைத்துவிட்டு… தப்பித்து ஓடிய மனைவி… நடந்தது என்ன..? திடுக்கிடும் சம்பவம்..!!

Published

on

தெலுங்கானா மாநிலம், நாகர் கர்நூல் மாவட்டம் அம்பராபாத் பகுதியைச் சேர்ந்தவர் புர்ஹானுத்தீன் (50). இவருக்கு சபியா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக புர்ஹானுத்தீனை மொபைல் போன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்ள முடியாததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினரான ஜஹீர் என்பவர், புர்ஹானுத்தீன் வீட்டிற்கு நேரில் சென்று தேடியுள்ளார்.

ஜஹீர் வீட்டிற்குச் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்ததுடன், வீட்டிற்குள் இருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு புர்ஹானுத்தீன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஒரு பிளாஸ்டிக் பையில் முழுமையாகச் சுற்றப்பட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு உறவினர் உறைந்துபோனார்.

Advertisement

இந்த கொடூரக் கொலை குறித்து ஜஹீர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், புர்ஹானுத்தீனை அவரது மனைவி சபியாவே கொலை செய்துவிட்டு, உடலை பிளாஸ்டிக் பையில் மூடி வைத்துவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய மனைவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in