CRIME
“பணத்தின் மீது வந்த பேராசை” 70 வயது பாட்டியை அடித்துக் கொன்ற சொந்த பேரன்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம், சௌடுப்பல் மண்டலத்திற்குட்பட்ட துப்பனபேட் கிராமத்தில் பணப் பேராசை மற்றும் கடன் தொல்லை காரணமாக, சொந்தப் பேரனே 70 வயதுப் பாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, யாதம்மா (70) என்ற மூதாட்டி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துக் கிடந்தார். இது குறித்து அவரது உறவினர் தர்ஷன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
உடற்கூறாய்வு அறிக்கையில் மூதாட்டியின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, இது கொலை வழக்கு என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், மூதாட்டியின் பேரன் மந்திபள்ளி ராஜு (31) என்பவரைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடன் தொல்லை மற்றும் மாதாந்திர தவணைகளைக் கட்ட முடியாததால், பாட்டியின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடிக்க அவரை அடித்துக் கொலை செய்ததை ராஜு ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார்.
