“வீட்டுக்குள் நிர்வாணக்கோலம்” வாய் பேச முடியாத, காது கேளாத பெண்… சிலிண்டரால் தலையை நசுக்கிக் கொலை செய்த கொடூரர்கள்… பாலியல் வன்கொடுமை என சந்தேகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வீட்டுக்குள் நிர்வாணக்கோலம்” வாய் பேச முடியாத, காது கேளாத பெண்… சிலிண்டரால் தலையை நசுக்கிக் கொலை செய்த கொடூரர்கள்… பாலியல் வன்கொடுமை என சந்தேகம்..!!

Published

on

பீகார் மாநிலம் கயாவில், 50 வயதுடைய வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத ஆதரவற்ற விதவை பெண் ஒருவர் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் உடல் ஆடைகளின்றி மீட்கப்பட்டதால், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கயா நகரின் முஃபசில் காவல் எல்லைக்குட்பட்ட மான்பூர் பகுதியில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. கணவரை இழந்து வீட்டில் தனியாக வசித்து வந்த “கூங்கி தேவி” என்ற அந்தப் பெண், வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர். சமையல் எரிவாயு சிலிண்டரால் அவரது தலையில் பலமுறை அடித்துக் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனை மற்றும் மருத்துவ அறிக்கை வந்த பிறகே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என மாநகர காவல் கண்காணிப்பாளர் அபிநவ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in