“அவ்ளோதான்.. நான் போறேன்” 43-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்… துண்டு துண்டாக சிதறிய உடல்.. பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவ்ளோதான்.. நான் போறேன்” 43-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்… துண்டு துண்டாக சிதறிய உடல்.. பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 94-இல் உள்ள புகழ்பெற்ற ‘சூப்பர்நோவா’ அடுக்குமாடி குடியிருப்பின் 43-வது மாடியில் இருந்து விழுந்து, குருக்ராமைச் சேர்ந்த சம்பவ் ஜெயின் (25) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நொய்டா செக்டார் 126 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சனிக்கிழமை மதியம் அரங்கேறியுள்ளது. மிக உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்ததால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

https://www.instagram.com/reel/DeBnt3fFDsj/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, குருக்ராமின் மானேசர் பகுதியைச் சேர்ந்த சம்பவ் ஜெயின், சூப்பர்நோவா சொசைட்டியின் ‘ஸ்பைரா’ கோபுரத்தில் உள்ள ஒரு பிளாட்டை Airbnb தங்குமிட சேவை மூலமாக ஒரு நாள் வாடகைக்கு எடுத்து வெள்ளிக்கிழமை மதியம் வந்து தங்கியுள்ளார். அவர் சனிக்கிழமை மதியம் அங்கிருந்து அறையை காலி செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அவர் வெளியேறுவதற்கு சற்று முன்பாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அருகில் இருந்த மற்றொரு பிளாட்டில் ஏசி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், சம்பவ் ஜெயின் பால்கனி பகுதியில் இருப்பதைக்கண்டு அவரைத் தடுத்துக் காப்பாற்ற தீவிரமாக முயன்றனர். அப்போது அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறிவிட்டு, திடீரென கீழே விழுந்துவிட்டார்.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்த செக்டார் 126 போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ் ஜெயினின் மொபைல் போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அவர் எதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார் என்ற பின்னணி குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in