CRIME
“கை நீட்டி அடிச்சதும் பதிலுக்கு அடி..” ரோந்து வந்த பெண் காவலரிடம் அராஜகம் பண்ணிய வாலிபர்.. CCTV காட்சியை வைத்து அலேக்காய் தூக்கிய போலீசார்..!!
பீகார் மாநிலம் பாட்னாவில் பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டதுடன், அவரை அறைந்த குற்றத்துக்காக 22 வயதான பிரதீப் குமார் என்ற வாலிபரை காவல்துறை கைது செய்துள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை சுமார் 6:30 மணியளவில் ‘போலீஸ் திதி’ அமைப்பைச் சேர்ந்த பெண் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த மூன்று இளைஞர்களை மறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது, பிரதீப் குமார் என்ற இளைஞர் பெண் காவலரிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த பெண் காவலர் பிரதீப்பை அறைந்ததும், பதிலுக்கு அவரும் அந்த பெண் காவலரை தாக்கியுள்ளார். இந்த மோதல் சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்த நிலையில், இறுதியில் அந்த மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட பிரதீப் குமாரை அடையாளம் கண்டு கைது செய்தனர். தப்பியோடிய மற்ற இரு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இந்த ‘போலீஸ் திதி’ என்ற பெண் காவலர்கள் குழு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
