ஐயோ பாவம்..! காட்டுப்பாதையில் அசுர வேகத்தில் பைக்கில் பறந்த இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்.. இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ பாவம்..! காட்டுப்பாதையில் அசுர வேகத்தில் பைக்கில் பறந்த இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்.. இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ..!!

Published

on

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள லதாகுரி-சால்சா காட்டுப் பகுதி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அந்த இளைஞர்கள் ரோஹித் முகமது மற்றும் அலிஃப் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மற்றும் உள்ளூர் வட்டாரங்களின் தகவல்படி, இந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிக்கொண்டே சமூக ஊடகங்களுக்காக ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து இந்த கொடூர விபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

https://twitter.com/nextminutenews7/status/2094365073208938875/video/1

Advertisement

கட்டுப்பாட்டை இழந்த இவர்களது மோட்டார் சைக்கிள், ஜல்பைகுரியைச் சேர்ந்த சமீர் பாசு மற்றும் பிரியங்கா சித்தா பாசு ஆகிய தம்பதியினர் வந்த ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த அசுர வேக மோதலில் வாகனங்களில் இருந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர்; எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு பைக் சவாரி இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த அதிவேக விபத்தின் கொடூரமான நேரடி வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வனப்பகுதி நெடுஞ்சாலைகளில் கடுமையான வேகக் கட்டுப்பாடுகளையும், தீவிரப் போக்குவரத்து கண்காணிப்பையும் அமல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in