CRIME
“நெஞ்சுப் பகுதியிலேயே கை வச்சார்..!” பல் வலிக்கு வந்த பெண்ணிடம் அநாகரிக அத்துமீறிய காமுக மருத்துவர்.. பொதுமக்கள் செய்த அதிரடி காரியம்.. பரபரப்பு பின்னணி..!!
உத்தரகாண்ட் மாநிலம் சமோலிமாவட்டம் ஜோஷிமத் பகுதியில், பல் வலி காரணமாகப் பல்லைச் சுத்தம் செய்ய வந்த இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பல் மருத்துவரை பொதுமக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளி ஊரிலிருந்து வந்து ஜோஷிமத் நகரில் கிளினிக் நடத்தி வரும் அந்த மருத்துவர், சிகிச்சையின் போது அந்தப் பெண்ணின் காலில் இருமுறை கையை வைத்துள்ளார். பெண் அவரது கையைத் தட்டிவிட்ட போதிலும், அந்த மருத்துவர் மீண்டும் தவறான எண்ணத்துடன் அவரிடம் அநாகரிகமாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் மருத்துவரை நோக்கிக் கேள்விகளைக் கேட்க, அந்த மருத்துவர் மேலும் கோபமடைந்து பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் கையை வைத்து அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் பயத்தில் சத்தமிட்டு அழத் தொடங்கியுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அந்த கிளினிக்கிற்குள் விரைந்து வந்து பார்த்தபோது, அந்தப் பெண் அழுதுகொண்டிருப்பதை உற்றுநோக்கினர். பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்தப் பெண் தமக்கு நேர்ந்த அனைத்துக் கொடுமைகளையும் உண்மையாகக் கூறியுள்ளார். தனது வயதையும் பொருட்படுத்தாமல் இத்தகைய மிகக் கேவலமான குற்றத்தைச் செய்த அந்த மருத்துவரின் அநாகரிகச் செயல் அங்கிருந்த பொதுமக்களைக் கொதித்தெழச் செய்தது. இத்தகைய நபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களது மருத்துவ உரிமத்தை (License) உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்யும் இவர்களுக்குக் கடுமையான தடியடி அல்லது சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தங்களின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
