CRIME
“அடக்கொடுமையே..” கையைப் பிடிச்சு இழுத்து நள்ளிரவு 11 மணிக்கு அத்துமீறிய காமுகர்கள்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள பிரபல அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது வேலையை முடித்துவிட்டுத் தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில் மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் அவரது கையைப் பிடித்து இழுத்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமிட்டுக் கூச்சல் போடவே, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூன்று பேரையும் கச்சிதமாகப் பிடித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராபின் நெல்சன் (22), கிருஷ்ணகுமார் (25) மற்றும் மனோ கார்த்திக் (20) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் சென்னையில் தற்போதைய முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.
