LATEST NEWS
“என்னால் முடியும்.. ” பேத்தியிடம் நோட்டுப் புத்தகத்தோடு ‘டியூஷன்’ படித்த பாட்டி.. டெலிவரி வந்ததும் செய்த கியூட்டான காரியம்.. நெட்டிசன்களை உருகவைத்த வைரல் வீடியோ..!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்வது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டாலும், முதியவர்களுக்கு இது இன்னும் சவாலான விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், ஒரு பாட்டி தனது பேத்தியிடம் மிக ஆர்வமாக ‘பிளிங்கிட் டியூஷன்’ படித்து, ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யக் கற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சான்யா ஹுசைன் என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அந்தப் பாட்டி ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்துக்கொண்டு, பேத்தி சொல்லிக் கொடுக்கும் ஒவ்வொரு அடியையும் ஒரு சமத்து மாணவியைப் போலப் பொறுமையாகக் குறித்துக் கொள்கிறார். பேத்தியின் வழிகாட்டுதலின்படி, மைக் மூலம் ‘ஷாம்பு’ என்று கூறி அதைத் தனது கார்ட்டில் வெற்றிகரமாகச் சேர்த்தும் விடுகிறார்.
https://www.instagram.com/reel/Ddi_UTLp6P-/?utm_source=ig_web_button_share_sheet
பொருட்கள் டெலிவரி செய்யப்படும் நேரத்தைக் கூட பாட்டி குறிப்பெடுக்க முயல, “அது ஒவ்வொரு முறையும் மாறும், அதை எழுத வேண்டாம்” என்று பேத்தி அன்போடு திருத்துகிறார். இறுதியாக ஆர்டர் செய்யப்பட்ட ஷாம்பு வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, அந்தப் பாட்டியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிதான் நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது; அது வெறும் பொருள் கிடைத்த மகிழ்ச்சி அல்ல, புதிய தொழில்நுட்பத்தைத் தான் கற்றுக்கொண்ட பெருமிதத்தின் அரிய வெளிப்பாடு. இந்த கியூட்டான வீடியோவைப் பார்த்த பிளிங்கிட் நிறுவனம், அந்தப் பாட்டிக்கு 11/10 மதிப்பெண் வழங்கி பாராட்டியதோடு, இதையே தங்களின் அதிகாரப்பூர்வ வழிகாட்டி வீடியோவாகமாற்றலாம் என்றும் நெகிழ்ந்து கமெண்ட் செய்துள்ளது.
