“எனக்கே விபூதியா..?” பேச்சு கொடுத்தே பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த தில்லுமுல்லு.. கையும் களவுமாகப் பிடித்து வச்சு செய்த வாலிபர்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கே விபூதியா..?” பேச்சு கொடுத்தே பெட்ரோல் பங்க் ஊழியர் செய்த தில்லுமுல்லு.. கையும் களவுமாகப் பிடித்து வச்சு செய்த வாலிபர்.. வைரலாகும் மாஸ் வீடியோ..!!

Published

on

நாக்பூரில் உள்ள லா காலேஜ் ஸ்கொயர் பகுதியில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க்கில், ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பேச்சு கொடுத்து ஏமாற்ற முயன்றபோது, அந்த இளைஞர் சாதுரியமாகச் செயல்பட்டு அந்த மோசடியைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்த்த் என்ற அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்திற்கு ரூ.500-க்கு பெட்ரோல் போடுவதற்காகச் சென்றபோது, அங்கிருந்த ஊழியர் மீட்டரை ‘பூஜ்ஜியம்’ ஆக்காமல், ஏற்கனவே அதில் இருந்த ரூ.102.66 என்ற தொகையிலிருந்தே பெட்ரோலை நிரப்பத் தொடங்கியுள்ளார். இளைஞரின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, அந்த ஊழியர் பணத்தை ஆன்லைனில் செலுத்துகிறீர்களா அல்லது ரொக்கமாகவா என்று பேச்சு கொடுத்து மீட்டரை மறைக்க முயன்றுள்ளார். ஆனால், முன்பே மீட்டரைக் கவனித்திருந்த பார்த்த், “பேச்சுக் கொடுத்து என்னைக் ஏமாற்ற பண்ணப் பார்த்தீங்களா?” என்று ஊழியரை அங்கேயே மடக்கியுள்ளார்.

https://www.instagram.com/reel/Ddgz2opMGbC/?utm_source=ig_embed&ig_rid=AsFq_gCnk9_v2bHDU-fDzjS

Advertisement

அந்த ஊழியரை இன்னும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக, மீட்டர் ரூ.128-ல் இருந்துதான் தொடங்கியது என்று பார்த்த் ஒரு பொய்யானத் தகவலைக் கூற, வாயில் குட்கா மென்றுகொண்டிருந்த அந்த ஊழியர் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் மென்று விழுங்கியுள்ளார். “உங்களைப் போன்ற பலரை நான் பார்த்திருக்கிறேன்” என்று அந்த ஊழியருக்குப் பார்த்த் பதிலடி கொடுத்துள்ளார். இந்த சுவாரசியமான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், மோசடி செய்ய நினைத்த நபரிடமே ‘ரிவர்ஸ் ஸ்கேம்’ செய்த இளைஞரைப் பாராட்டி வருவதோடு, “ஹேக்கரை விட டெவலப்பர் புத்திசாலி” என்ற சமூக வலைதளப் பழமொழியைக் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in