செம குட் நியூஸ்..! ஆன்லைன் பத்திரப் பதிவுக்கு கட்டணமில்லா வில்லங்க சான்றிதழே போதும்… பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பு ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம குட் நியூஸ்..! ஆன்லைன் பத்திரப் பதிவுக்கு கட்டணமில்லா வில்லங்க சான்றிதழே போதும்… பத்திரப்பதிவுத்துறை அறிவிப்பு ..!!

Published

on

தமிழகப் பதிவுத்துறை, பொதுமக்கள் அலைச்சலைக் குறைக்கும் வகையில் இணைய வழி (Online) பத்திர பதிவிற்கான முக்கிய சலுகைகள் மற்றும் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இனி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலம் பத்திர பதிவு செய்யும்போது, கட்டணமின்றி இணையதளத்தில் பெறப்படும் வில்லங்க சான்றிதழே (EC) போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என பதிவுத்துறை தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் நிறைவு தொடர்பான ரசீது ஆவணங்களை பதிவு செய்வதற்கு வில்லங்க சான்று சமர்ப்பிக்க தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நேரடி வருகையில்லா (Faceless) பத்திர பதிவு முறைக்கு விடுமுறை நாள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in