“அய்யோ ச்சீ .. இது குடிநீர்த் தொட்டியா..?” சுத்தம் செய்ய குதித்த இளைஞர்.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி.. நெட்டிசன்களை உரைய வைத்த வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ ச்சீ .. இது குடிநீர்த் தொட்டியா..?” சுத்தம் செய்ய குதித்த இளைஞர்.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி.. நெட்டிசன்களை உரைய வைத்த வைரல் வீடியோ..!!

Published

on

நொய்டாவின் செக்டர் 11 பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய பொது குடிநீர்த் தொட்டியின் உட்பகுதியைச் சுத்தம் செய்வதற்காக, அர்பித் என்ற இன்ஸ்டாகிராம் வ்லாகர் தனது நண்பர்களுடன் உள்ளே இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் இந்தத் தொட்டியின் உள்ளே ஏறும் ஏணி உடைந்த நிலையில் இருப்பதையும், உள்ளே பெருமளவில் தடிமனான களிமண் மற்றும் சேறு தேங்கிக் கிடப்பதையும் அவர் தனது வீடியோவில் காட்டியுள்ளார். குடிநீர்த் தொட்டியின் இந்த மோசமான நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டிய அவர், மொத்தம் 7 முதல் 8 பாகங்களாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தச் துப்புரவுப் பணியைப் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/DdjIoMayBeU/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

மிகவும் உயரமான மற்றும் ஆபத்தான இந்தத் தொட்டியின் உள்ளே 4 முதல் 5 பேர் இணைந்து, தீவிர முயற்சி மேற்கொண்டு தண்ணீர்க் குழாய்களையும் உட்பகுதியையும் முழுமையாகச் சுத்தம் செய்து முடித்துள்ளனர். தண்ணீர் அழுத்தம் மற்றும் உயரத்தின் காரணமாக இத்தகைய தொட்டிகளில் ஏறுவது மிகுந்த உயிராபத்து நிறைந்தது என்பதால், நெட்டிசன்கள் பலரும் இவர்களது கடின உழைப்பைப் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், தொட்டியின் உள்ளே இருந்த அதிர்ச்சியூட்டும் அழுக்கு மற்றும் சேற்றைக் கண்ட பொதுமக்கள், “இதைப் பார்த்தால் குடிநீர்த் தொட்டி போலத் தெரியவில்லை, மண்ணின் தொட்டி போல இருக்கிறது; இதன் உள்ளே மூச்சு திணறிவிடும் போல உள்ளது” எனத் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in