CRIME
“நொய்டா சாலையில் பயங்கரம்..” தலைகீழாகக் கவிழ்ந்த ஆடி கார்.. நொடிப் பொழுதில் நொறுங்கிய சொகுசு வாகனம்.. ஓடி வந்த பொதுமக்கள் செய்த ‘அந்த’ காரியம்! வைரல் வீடியோ..!!
கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ராக் பகுதியில் அமைந்துள்ள 130 மீட்டர் சாலையில், ஆடி காரும் டொயோட்டா கிளான்ஸா காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஒரு பயங்கர விபத்து நேற்று நடந்துள்ளது. இரு வாகனங்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த பலத்த மோதலின் தாக்கத்தால் சொகுசு காரான ஆடி கார் நிலைதடுமாறி, பிஸியான அந்த சாலையின் நடுவிலேயே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரில் பார்த்த பாதசாரிகளும் மற்ற வாகன ஓட்டிகளும் உடனடியாக சம்பவ இடத்தில் கூடி, தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்த ஆடி காரை தங்களது கூட்டு முயற்சியால் நிமிர்த்தி உதவினர்.
ஆடி கார் தலைகீழாகக் கவிழும் அளவுக்கு விபத்தின் வீரியம் கடுமையாக இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால், இரு கார்களும் எவ்வாறு மோதிக்கொண்டன, விபத்துக்கான பின்னணி மற்றும் காரணங்கள் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேட்டர் நொய்டாவின் அகலமான சாலைகளில் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் ஏற்படும் சாலைப் பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்தும் இந்த விபத்து தற்போது சமூகத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
