“ஒரு கார் சென்சார் சத்தத்திற்கு இப்படியா..?” பெண் வழக்கறிஞரின் காரை நடுரோட்டில் கொளுத்தி போனில் ‘லைவ் வீடியோ’ எடுத்த சைக்கோ.. சிசிடிவியில் சிக்கிய அதிர வைக்கும் காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒரு கார் சென்சார் சத்தத்திற்கு இப்படியா..?” பெண் வழக்கறிஞரின் காரை நடுரோட்டில் கொளுத்தி போனில் ‘லைவ் வீடியோ’ எடுத்த சைக்கோ.. சிசிடிவியில் சிக்கிய அதிர வைக்கும் காட்சி..!!

Published

on

குஜராத் மாநிலம் மோர்பி நகரில், பெண் வழக்கறிஞரின் கார் சென்சார் தொடர்ந்து சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், அந்த காரின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த அந்த காரின் சென்சார் சத்தம் தன்னை எரிச்சலூட்டியதாகக் கூறி, மர்ம நபர் ஒருவர் காரின் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். மேலும், கார் பற்றி எரியும் கொடூரக் காட்சியைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு, அவர் அங்கிருந்து சாதாரணமாக நடந்து சென்றுள்ளார். இந்த ஒட்டுமொத்தப் பகீர் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், மோர்பி ஏ பிரிவு காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் முடுக்கிவிட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரை எரித்த நபரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து, அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். ஒரு சின்ன கார் சென்சார் சத்தத்திற்காகப் பொது இடத்தில் காரைக் கொளுத்தி, அதை வீடியோவும் எடுத்த அந்த நபரின் விசித்திரமான மற்றும் ஆபத்தான செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in