“வயசெல்லாம் ஒரு மேட்டரே இல்லை..” ஆபீஸ் தீபாவளி பார்ட்டியில் பட்டையைக் கிளப்பிய அங்கிளின் டான்ஸ்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வயசெல்லாம் ஒரு மேட்டரே இல்லை..” ஆபீஸ் தீபாவளி பார்ட்டியில் பட்டையைக் கிளப்பிய அங்கிளின் டான்ஸ்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

தீபாவளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். மக்கள் தங்கள் அன்றாட வேலை மற்றும் பணிச்சுமையின் டென்ஷனை மறந்து குஷியாக இருக்கும் இந்தத் தருணம், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அங்கு நடைபெற்ற தீபாவளி பார்ட்டியின் போது ஒரு வயது முதிர்ந்த ஊழியர் தனது துள்ளலான நடனத்தால் ஒட்டுமொத்த அலுவலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்த சுவாரஸ்யமான தருணத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பணியின் போது சக ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்த வேளையில், திடீரென அந்த மூத்த ஊழியர் உற்சாகமாக நடனமாடத் தொடங்கினார். எந்தவிதத் தயக்கமும் இன்றி முழு ஆற்றலுடனும் மகிழ்ச்சியுடனும் அவர் செய்த நடன அசைவுகள் அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. பின்னணியில் பிரபல பாடலான ‘இஷ்க் தேரா தட்பவே’ இசை ஒலிக்க, அதற்கு ஏற்றவாறு அவர் போட்ட அதிரடியான ஸ்டெப்களும் முகத்தில் வெளிப்பட்ட உற்சாகக் கலைகளும் அங்கிருந்த சூழலை மேலும் கலகலப்பாக்கின.

Advertisement

வழக்கமாக அலுவலகக் கொண்டாட்டங்களில் மக்கள் சற்று அடக்கியே வாசிப்பார்கள், ஆனால் இந்த முதியவர் எந்தக் கூச்சமும் இன்றித் தன் கண நேர மகிழ்ச்சியை முழுமையாக அனுபவித்தார். அவரது இந்தச் செயலைக் கண்டு வியந்த மற்ற ஊழியர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து கைதட்டியும், தங்களது மொபைல் போன்களில் இந்த அழகிய தருணத்தைப் பதிவு செய்தும் அவரை உற்சாகப்படுத்தினர். இந்த வைரல் வீடியோ தற்போது இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in