CRIME
“அடக்கொடுமையே.. சாணம் அள்ளச் சென்ற கல்லூரி மாணவி..” 6 காமுகர்கள் செய்த வெறிச்செயல்.. வீடியோ எடுத்து மிரட்டியதால் மாணவி எடுத்த விபரீத முடிவு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குர்சராய் பகுதியில், 19 வயது பி.ஏ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுத் தொழுவத்தில் சாணம் அள்ளச் சென்ற அந்த மாணவியைத் தனிமையான இடத்திற்கு வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்ற காமுகர்கள் 6 பேர், அவரைத் தொடர்ச்சியாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, இக்கொடூரச் செயலைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்த அந்த கும்பல், இதைப் பற்றி வெளியே கூறினால் சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவதாக மாணவியை மிரட்டியுள்ளது. தமக்கு நேர்ந்த இந்த மிகக் கொடிய கொடுமையைத் தாங்க முடியாமல், அந்த மாணவி தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரில் சுஷில், அஜய், குல்லோ, சோட்டு மற்றும் கிருஷ்ணா ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் எஞ்சிய ஒரு குற்றவாளியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் செய்தி சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
