ஐ.நாவாவது… உலக அரசியலாவது… இன்ஸ்டா ரீல்ஸ் தான் முக்கியம்.. எர்டோகன் மேடையில் உருக்கமான பேச்சு… கண்டுக்காமல் போனில் மூழ்கிய சிரிய அதிபர்..! வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐ.நாவாவது… உலக அரசியலாவது… இன்ஸ்டா ரீல்ஸ் தான் முக்கியம்.. எர்டோகன் மேடையில் உருக்கமான பேச்சு… கண்டுக்காமல் போனில் மூழ்கிய சிரிய அதிபர்..! வைரல் வீடியோ..!!

Published

on

நியூயார்க்கில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாரா தனது மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்திக் கொண்டிருந்த காட்சி கேமராவில் சிக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

பாஷர் அல்-அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிரியாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்ற அகமது அல்-ஷாரா, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். துருக்கி அதிபர் எர்டோகன் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், அவையில் அமர்ந்திருந்த அல்-ஷாரா தனது கவனத்தை போனில் செலுத்தி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களைப் பார்த்துக் கொண்டிருந்தது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. சிரியாவின் புதிய தலைமைக்கு எர்டோகன் தனது ஆதரவைத் தெரிவித்துப் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

காசா மோதல், உக்ரைன் போர், செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் போன்ற உலகளாவிய முக்கியப் பிரச்சினைகள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதித்து வரும் நிலையில், சர்வதேச ராஜதந்திரக் கூட்டத்தில் சிரிய அதிபரின் இந்த இயல்பான போன் பயன்பாடு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in