CRIME
“அடப்பாவி… முதலாளி செய்த துரோகம்..” ஆத்திரத்தில் ரூ.150 பெட்ரோலால்ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
குஜராத் மாநிலம் சூரத் நகரில், தனக்கு வழங்க வேண்டிய ரூ.10,000 சம்பள பாக்கியை முதலாளி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர், பெட்ரோல் ஊற்றி ரூ.24 கோடி மதிப்புள்ள துணிப் பார்சல்களைத் தீயிட்டுக் கொளுத்திய துணிகரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெகா தீ விபத்து குறித்து சூரத் குற்றப்பிரிவு போலீசார்நடத்திய தீவிர விசாரணையின் போது, பிடிபட்ட அந்த ஊழியர் தனது அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். தனக்குச் சேர வேண்டிய ரூ.10,000 சம்பளப் பணத்தைத் தராமல் ஏமாற்றிய இரண்டு கடைகளின் உரிமையாளர்களைப் பழிவாங்குவதற்காகவே இந்த விபரீதச் செயலைத் தான் அரங்கேற்றியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்காக அந்த ஊழியர் ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி வந்து, நள்ளிரவில் கடையின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிப் பார்சல்கள் மீது ஊற்றித் தீப்பற்ற வைத்துள்ளார். துணிகள் என்பதால் தீ மிக வேகமாகப் பரவி, ஒட்டுமொத்தப் பார்சல்களும் எரிந்து சாம்பலாகின; இதனால் முதலாளிகளுக்கு சுமார் ரூ.24 கோடி அளவிற்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தீயை மூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிய அந்த ஊழியரைச் சூரத் குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வெறும் ரூ.10,000 சம்பளப் பிரச்சினைக்காகப் பெட்ரோல் ஊற்றி ரூ.24 கோடியைச் சாம்பலாக்கிய இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த வணிகர்கள் மத்தியிலும் சூரத் பகுதியிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
