CRIME
“உன்னை எனக்குப் பிடிக்கல..!” சந்தேகப்பட்டு கணவன் செய்த கொடூர காரியம்.. கதறி துடித்த 60 வயது மனைவி.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆனைக்கல் மேடு பகுதியில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆறுமுகம் என்ற கணவன், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தனது 60 வயது மனைவி முத்தம்மாளின் முகத்தில் கொடூரமான முறையில் ஆசிட் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேகோ ஆலையில் பணிபுரியும் ஆறுமுகம், கடந்த ஓராண்டாகத் தனது மனைவியை சந்தேகப்பட்டுத் தினமும் அடித்து, உதைத்துச் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்து கணவரைப் பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்ற முத்தம்மாளை, “இனி சந்தேகப்பட மாட்டேன்” என்று உறவினர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசி சமாதானம் செய்து, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் ஆறுமுகம் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென முத்தம்மாளை எழுப்பிய ஆறுமுகம், “என்னை உனக்கு பிடிக்கவில்லை” எனக் கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு முத்தம்மாள் எதுவும் பேசாமல் மீண்டும் படுத்து உறங்கியதால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவரது முகத்தில் ஊற்றியுள்ளார். முத்தம்மாள் வலி தாங்க முடியாமல் அலறிய சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கணவர் ஆறுமுகத்தைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
