CRIME
“எனக்குத் தெரியாம ரெண்டாவது கல்யாணமா..?” கோர்ட் வாசலில் கணவனைப் பார்த்ததும் மனைவி செய்த ‘அந்த’ அதிரடி காரியம்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் நீதிமன்ற வளாகத்தில், குடும்பத் தகராறு காரணமாக விசாரணைக்கு வந்த காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நீதிமன்ற வாசலிலேயே தனது கணவரைச் சரமாரியாக அடித்துத் துவம்சம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்கனவே குடும்பப் பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. இதற்கான விசாரணைக்காக அந்தப் பெண் தனது தாயாருடன் ராம்பூர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கணவனும் மனைவியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்தத் தருணத்தில், தனது கணவர் தனக்குத் தெரியாமல் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய அந்தப் பெண், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று கணவரைப் பிடித்துப் பொதுவெளியில் வைத்துத் தீவிரமாகத் தாக்கத் தொடங்கினார். அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண் தனது கணவரைச் சரமாரியாக அடிக்க, அந்தப் பாழாய்ப்போன கணவரோ தற்காப்புக்காகப் பெண்ணின் அடிகளில் இருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்று தெரியாமல் தவித்து நின்றுள்ளார். நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே கணவனை மனைவி அடித்து வெளுத்த இந்த வினோதச் சம்பவம் அங்கு வந்திருந்த பொதுமக்களையும் வழக்கறிஞர்களையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
