“என் ஏரியாவுல என்னையே எதிர்ப்பியா..?” பானி பூரி கடைக்காரரை அடித்து துவம்சம் செய்த பெண் ரவுடி… வெளியான அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் ஏரியாவுல என்னையே எதிர்ப்பியா..?” பானி பூரி கடைக்காரரை அடித்து துவம்சம் செய்த பெண் ரவுடி… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையில் பானி பூரி கடை நடத்தி வரும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் (25) என்பவரை, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நிஷாந்தி (33) என்ற பெண்ணைத் தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அபினேஷின் வீட்டின் அருகே வசிக்கும் நிஷாந்தி, தனது வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்று வந்ததாகத் தெரிகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இந்தச் செயலை அபினேஷ் தட்டிக்கேட்டுக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவரைத் தடியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த அபினேஷ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட நிஷாந்தியின் வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அங்கிருந்த 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கைது செய்யப்பட்ட நிஷாந்தி சாதாரணமானவர் அல்ல என்பதும், அவர் பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அம்பலமாகியுள்ளது. இவர் மீது ஏற்கனவே சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 15 வழக்குகளும், கஞ்சா கடத்தல், திருட்டு, அடிதடி உள்ளிட்ட மொத்தம் 27 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தட்டிக்கேட்ட கடைக்காரரை ரவுடிப் பெண் தாக்கிய இந்தச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in