LATEST NEWS
கோட்டையில் அதிரடி திருப்பம்!.. மூன்று அமைச்சர்களின் பதவிகளைப் பறிக்கப் போகிறாரா முதல்வர் விஜய்..? உளவுத்துறை கொடுத்த ரகசிய ரிப்போர்ட்..!!
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்து சில மாதங்களே நிறைவடைந்துள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் தீவிரமாகத் திட்டமிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சரின் தலைமை ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி தலைமையிலான குழுவினர், ஒவ்வொரு அமைச்சரின் கோப்பு மேலாண்மை, அதிகாரிகளுடனான இணக்கம் மற்றும் தொகுதிப் பணிகள் குறித்து விரிவான கள ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையோடு, மாநில உளவுத்துறை சமர்ப்பித்துள்ள ரகசியத் தரவுகளையும் முதலமைச்சர் விஜய் மிகத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் இந்த அமைச்சரவை புனரமைப்பு அதிகாரப்பூர்வமாக அரங்கேற உள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கை அறிக்கையின்படி, மாற்றுக்கட்சி பிரமுகர்களுடன் ரகசியத் தொடர்பில் இருந்த ஒரு முக்கியப் பெண் அமைச்சர் உட்படச் செயல்திறன் குறைந்த மூன்று தவெக அமைச்சர்களின் பதவிகள் முற்றிலுமாகப் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சரின் இலாகாவும் மாற்றப்படக் கூடும் என்பதால், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே எடுக்கப்படவுள்ள இந்த அதிரடி முடிவு தற்போதைய தமிழக அரசியல் களத்தில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது
