“தவெக இனி விஜய்யோட கட்சி இல்ல… திமுக கூடாரம்..!” வீடியோ வெளியிட்டு தவெக நிர்வாகி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் தலைமை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தவெக இனி விஜய்யோட கட்சி இல்ல… திமுக கூடாரம்..!” வீடியோ வெளியிட்டு தவெக நிர்வாகி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் தலைமை..!!

Published

on

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த தவெக முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான முத்துக்குமரன் (31), கட்சித் தலைமைக்கு எதிராக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26 ஆண்டுகளாகத் தவெக தலைவர் விஜய்யின் தீவிர ரசிகனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர், கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்டப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த உண்மையான தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவிலிருந்து அண்மையில் தவெக-விற்கு வந்தவர்களுக்குத் தொடர்ச்சியாக முக்கியப் பொறுப்புகளும் பதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் தவெக தற்போது ‘திமுகவின் கூடாரமாக’ மாறி வருவதாகவும் அவர் அந்த வீடியோவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவருக்குத் தவறான வழிகாட்டுதலை வழங்கி, உழைத்த நிர்வாகிகளின் பதவிகளைப் பறிக்கும் செயல்களில் உள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட முத்துக்குமரன், குளிர்பானத்தில் விஷத்தைக் சாணி பவுடர் கலந்து குடித்தபடி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவிய நிலையில், மயங்கிக் கிடந்த அவரை அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்கட்சிப் பூசல் மற்றும் திமுகவிலிருந்து வந்தவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதைக் கண்டித்து தவெக நிர்வாகி ஒருவரே தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in