“”நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்..” பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த அந்த ஒரு கொடூரம்.. தடுக்க வந்த மனைவிக்கும் நேர்ந்த கதி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“”நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்..” பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த அந்த ஒரு கொடூரம்.. தடுக்க வந்த மனைவிக்கும் நேர்ந்த கதி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பெருமாள்ராஜபேட்டையில், வேலைக்குச் செல்லாமல் இருந்ததைத் தட்டிக்கேட்ட 51 வயது தாயை அவரது சொந்த மகனே உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன மெக்கானிக்கான முனுசாமி (38) என்பவர் கடந்த ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார். இதனால் கவலையடைந்த அவரது தாய் தனலட்சுமி, நேற்று முன்தினம் இரவு முனுசாமியின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை குறித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நள்ளிரவைக் கடந்து அதிகாலை வரை கடுமையான வாக்குவாதம் நீடித்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற முனுசாமி, வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்துத் தாய் தனலட்சுமியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதனைத் தடுக்க வந்த முனுசாமியின் மனைவி மீனாவையும் அவர் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; ஆனால் தனலட்சுமி வழியிலேயே பரிசோதனை செய்த மருத்துவர்களால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அரக்கோணம் தாலுகா போலீசார், தலைமறைவாக இருந்த முனுசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in