ச்சீ அசிங்கம்..! சிறுமிகளை மடியில் அமரவைத்து… வகுப்பறையில் பள்ளி ஆசிரியர் செய்த கேவலம்… பயத்தில் உண்மையை சக ஆசிரியரிடம் சொன்ன சிறுமி…!! – cinefeeds
Connect with us

CRIME

ச்சீ அசிங்கம்..! சிறுமிகளை மடியில் அமரவைத்து… வகுப்பறையில் பள்ளி ஆசிரியர் செய்த கேவலம்… பயத்தில் உண்மையை சக ஆசிரியரிடம் சொன்ன சிறுமி…!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், 3 மற்றும் 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 56 வயது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வி கற்கும் இடத்தில் அரங்கேறியுள்ள இந்த அவலச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட திலீப் போர்கர் என்ற அந்த ஆசிரியர், வகுப்பறையில் பாடம் நடத்துவது போல நடித்து, சிறுமிகளைத் தனது மடியில் அமர வைத்துத் தொடர்ந்து அசிங்கமான முறையில் நடந்து கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்த அத்துமீறல் தொடர்ந்து வந்த நிலையில், பயந்துபோய் மௌனமாக இருந்த ஒரு சிறுமி, தற்பொழுது தைரியமாகத் தனது பள்ளியில் உள்ள ஒரு பெண் ஆசிரியரிடம் அழுதுகொண்டே உண்மைகளைக் கூறியுள்ளார். அந்தப் பெண் ஆசிரியை உடனடியாக இத்தகவலைச் சிறுமியின் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

Advertisement

தங்கள் பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்த கிராம மக்களும், பெற்றோர்களும் ஆத்திரமடைந்து பள்ளிக்குத் திரண்டு வந்து, அந்த காமுக ஆசிரியரைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்துப் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள வாஷிம் போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களை ரகசியமாகப் பதிவு செய்து, அந்த ஆசிரியர் வேறு எந்த சிறுமிகளுக்காவது இதுபோன்று தொல்லை கொடுத்துள்ளாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in