“வெளியில சொன்னா கொலை செஞ்சிடுவேன்..” பள்ளியில் 11 வயது சிறுவனுக்கு 2 ஆண்டாக நடந்த கொடூரம்.. உயிருக்கு பயந்து கதறிய சிறுவன்.. கேரளாவை உலுக்கிய காமுக ஆசிரியரின் பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“வெளியில சொன்னா கொலை செஞ்சிடுவேன்..” பள்ளியில் 11 வயது சிறுவனுக்கு 2 ஆண்டாக நடந்த கொடூரம்.. உயிருக்கு பயந்து கதறிய சிறுவன்.. கேரளாவை உலுக்கிய காமுக ஆசிரியரின் பகீர் பின்னணி..!!

Published

on

கேரள மாநிலம் கண்ணூரில், 11 வயது சிறுவனை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் மலப்புறம் முத்துவளூர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது பஷீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாணவனுக்கு 11 வயது இருக்கும்போதே இந்த பாலியல் துன்புறுத்தலை அந்த ஆசிரியர் தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தச் சிறுவனுக்குத் தொடர்ச்சியாக இந்த கொடுமை நடந்து வந்துள்ளது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement

இந்த கொடூரச் செயலை வெளியில் யாரிடமாவது கூறினால், கொலை செய்துவிடுவதாக அந்தச் சிறுவனை ஆசிரியர் முஹம்மது பஷீர் கொடூரமாக மிரட்டியுள்ளார். உயிருக்கு பயந்ததன் காரணமாகவே, தனக்கு நடந்த இந்த அநீதியை அந்தச் சிறுவன் யாரிடமும் சொல்லாமல் நீண்ட நாட்களாக மறைத்து வந்துள்ளான். தற்போது இந்த விவகாரம் வெளியில் தெரிந்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in