“வீட்டை விட்டு வா, கல்யாணம் பண்ணிக்கலாம்…” காதலனை நம்பி ₹1.35 லட்சத்துடன் நள்ளிரவில் வந்த 18 வயது பெண்.. நண்பர்கள் செய்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“வீட்டை விட்டு வா, கல்யாணம் பண்ணிக்கலாம்…” காதலனை நம்பி ₹1.35 லட்சத்துடன் நள்ளிரவில் வந்த 18 வயது பெண்.. நண்பர்கள் செய்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் காதலியைக் கொடூரமான முறையில் கொலை செய்து, அவரிடமிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற திடுக்கிடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீர் என்ற இளைஞன், 18 வயதான நேகா கான் என்ற பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியேறி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசை வார்த்தைகளைக் கூறி நம்ப வைத்துள்ளான். மேலும், வரும்போது வீட்டில் இருக்கும் பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்து வருமாறு அவன் கூற, அதை நம்பிய நேகாவும் சம்மதித்துள்ளார். காதலன் சொன்னபடியே, நேகா நள்ளிரவில் தன் வீட்டில் இருந்த ரூ.1.35 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளுடன் அவனிடம் வந்துள்ளார்.

ஆனால், நேகா கொண்டு வந்த பணம் மற்றும் நகைகளைப் பறித்துக் கொண்ட சமீர், அவளைத் திருமணம் செய்யாமல் தனது நண்பர்களான அர்ஷத், அர்ஸ்லான் மற்றும் அமித் ஆகிய மூவரின் உதவியுடன் நேகாவை கொடூரமான முறையில் கொலை செய்தான். பின்னர் அவளது உடலை அங்கிருந்த ஒரு விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள குழாய்க்கிணறு தொட்டியின் மீது வீசிவிட்டு அவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தத் துயரமான கொலையில் தொடர்புடைய காதலன் சமீர் மற்றும் அவனது நண்பர்கள் உட்பட நான்கு குற்றவாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in