CRIME
நெஞ்சே பதறுது… ஒரு மாசமா காணாம போன புருஷன்.. ராத்திரியோட ராத்திரியா வந்து பொண்டாட்டிக்கு பண்ண கொடூரம்… சன்னல் வழியா எட்டிப் பார்த்த மக்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..! ஆக்ராவை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
ஆக்ரா மாவட்டம், கண்டௌலி காவல் எல்லைக்குட்பட்ட பீலிபோகர் கிராமத்தில் குடும்ப உறவை உலுக்கும் வகையில் ஒரு கொடூரக் கொலை சம்பவம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த விவேக் சிகர்வார் என்ற வேலையற்ற நபர், கடந்த ஒரு மாதமாக வீட்டை விட்டு காணாமல் போயிருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு திடீரென வீட்டிற்கு திரும்பியுள்ளார். அன்று இரவு மனைவி கிரணுடன் ஏற்பட்ட தகராறில், கோபமடைந்த விவேக் மனைவியின் தலையில் கனமான பொருளால் தாக்கி, பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, விவேக் தனது இரு சிறு மகன்களான லக்ஷ்யா மற்றும் சுன்னு ஆகியோரை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகத் தப்பி ஓடிவிட்டார்.
எத்மத்பூர் பகுதியைச் சேர்ந்த கிரணுக்கும் விவேக்கிற்கும் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு விவேக் எவ்வித வேலையும் செய்யாமல் இருந்ததோடு, அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு கிரணை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கிரணின் சகோதரர் லலித் தெரிவிக்கையில், குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க இரு குடும்பத்தினரும் கிராமப் பெரியவர்களும் சேர்ந்து பலமுறை பஞ்சாயத்துகளைக் கூட்டி சமரசம் செய்தனர். ஒவ்வொரு முறையும் திருந்தி விடுவதாகக் கூறும் விவேக், வீட்டிற்குச் சென்றதும் மீண்டும் மனைவியை அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
செவ்வாய்க்கிழமை மதியம் வரை கிரணின் வீட்டின் கதவு திறக்கப்படாமலும், குழந்தைகள் வெளியில் விளையாட வரமலும் இருந்ததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார், சன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது கிரண் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் கண்டௌலி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தடம் அறிவியல் (Forensic) குழு மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சான்றுகளைச் சேகரித்தனர். கிரணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய காவல் துறையினர், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள விவேக்கைக் கைது செய்யவும், குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்கவும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
