LATEST NEWS
காதலனுக்காக பெண்ணாக மாறிய திருநங்கை… ரூ.10 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்டு 2 குழந்தைகளுடன் எஸ்கேப் ஆன கணவர்.. கடைசியில் தெரியவந்த பயங்கர உண்மை..!!
ஆக்ராவில் திருநங்கை ஒருவர் வாலிபர் ஒருவரைக் காதலித்த விவகாரம் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. அந்த வாலிபருடன் முதலில் ஏற்பட்ட நட்பு, பின்னர் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, அந்தத் திருநங்கை வெவ்வேறு காலகட்டங்களில் 3 முக்கிய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு முழுமையாகப் பெண்ணாக மாறியுள்ளார். இதற்காக சுமார் 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ள அவர், அந்த சிகிச்சைகளின் போது சொல்லொணா உடல் ரீதியான வலிகளையும் வேதனைகளையும் தாங்கியுள்ளார்.
ஆனால், அந்தப் பெண் அனைத்துத் துயரங்களையும் தாங்கிப் பெண்ணாக மாறிய பிறகு, அந்த வாலிபர் அவரைத் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காதலித்த வாலிபருக்கு எதிராகப் போலிசில் புகார் அளித்து வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்தப் புகாரில், “அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த உண்மைகளை ஒன்றரை வருடங்களாக என்னிடமிருந்து திட்டமிட்டு மறைத்து வந்துள்ளார்” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த வாலிபர் தன்னை ஏமாற்றித் தன்னிடம் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது தன்னிடம் காதலித்த வாலிபரும் இல்லை, சிறுகச் சிறுகச் சேர்த்த பணமும் இல்லை என்று கண்ணீருடன் தெரிவித்துள்ள அவர், தனக்கு நீதி கிடைக்க காவல்துறையினரே இறுதி புகலிடம் என்றும் அவர்களின் உதவியை நாடியுள்ளதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
