“யாரும் எந்த தப்பும் செய்யக்கூடாது” எல்லாத்தையும் CM பாத்துட்டு தான் இருக்காரு.. அமைச்சர்களுக்கு CM அனுப்பிய வார்னிங் மெசேஜ்… உண்மையை உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரும் எந்த தப்பும் செய்யக்கூடாது” எல்லாத்தையும் CM பாத்துட்டு தான் இருக்காரு.. அமைச்சர்களுக்கு CM அனுப்பிய வார்னிங் மெசேஜ்… உண்மையை உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்..!!

Published

on

அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் விஜய் அனைத்து அமைச்சர்களுக்கும் தனிப்பட்ட முறையில் முக்கிய குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்த செய்தியில், அமைச்சர்கள் யாரும் எந்தவொரு தவறும் செய்யக்கூடாது என்றும், முழு முதற்கடமையாக மக்களுக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைச்சரவையில் எந்தவொரு ஊழலும் இல்லாமல் நேர்மையாகச் செயல்பட்டு, மக்களிடையே நன்மதிப்பையும் பெரும் நம்பிக்கையையும் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் அனைவரின் செயல்பாடுகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், மக்களுக்குத் தேவையான திட்டங்கள் மற்றும் உதவிகள் அனைத்தையும் முழு முனைப்புடன் செய்து முடிப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in