LATEST NEWS
காலையிலேயே ஸ்டாலின் தலையில் விழுந்த இடி… திமுக பிரமுகர் இபிஎஸ் முன்னலையில் அதிமுகவில் இணைந்தார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!
திமுக திருவண்ணாமலை மத்திய மாவட்ட விவசாய அணி செயலாளரும், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளருமான ஜி.வெங்கடேசன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த மேலும் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த மாதத்திற்குள் அதிமுகவில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதேபோன்று, திருப்பூர் தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியைச் சேர்ந்த பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும், முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா முன்னிலையில் தங்களது ஆதரவை தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழகத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இந்த தொடர் சேர்க்கைகள், தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
