பள்ளிக்குச் சென்ற 3 மாணவிகள் திடீர் மாயம்.. 5 மணி நேர மின்னல் வேக ஆபரேஷன்.. கடைசியில் நடந்த செம ட்விஸ்ட்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

பள்ளிக்குச் சென்ற 3 மாணவிகள் திடீர் மாயம்.. 5 மணி நேர மின்னல் வேக ஆபரேஷன்.. கடைசியில் நடந்த செம ட்விஸ்ட்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவிகள் திடீரென மாயமான சம்பவத்தில், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு 5 மணி நேரத்திற்குள் அவர்களைச் சென்னையில் பத்திரமாக மீட்டுள்ளனர். தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான மகாலட்சுமி, மகேஸ்வரி மற்றும் அவர்களது உறவினரான நித்யா ஆகிய மூவருமே தண்டராம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது பெற்றோர்கள் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், மாணவிகள் தங்களது பாட்டியின் பராமரிப்பிலும், வாடகை வீட்டிலும் தங்கிப் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவிகளும் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததால் பெரும் கவலையடைந்தனர். இதுகுறித்துத் தகவல் பரவியதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மாணவிகளைக் கண்டுபிடிப்பதற்காகத் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

Advertisement

இதற்கிடையே, மாயமான மாணவிகள் மூவரும் சென்னைக்குச் சென்று மெரினா கடற்கரையைச் சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர், நேற்று இரவு அவர்கள் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் மாணவிகளை அடையாளம் கண்டு பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மாணவிகள் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்கள் எதற்காகச் சென்னைக்குச் சென்றனர் என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளை ஐந்தே மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்குப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in