LATEST NEWS
“என்ன நடக்கிறது..? பள்ளிக்குப்போன என் புள்ளைங்க எங்கே..?” கதறித் துடிக்கும் பெற்றோர்கள்… அடுத்தடுத்து மாயமாகும் மாணவிகளால் நிலவும் பதற்றம்..!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே சிறுவர், சிறுமிகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த தொடர் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது திருவண்ணாமலையில் ஒரேநாளில் 3 சிறுமிகள் மாயமான சம்பவம் மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அரசுப் பள்ளியில் பயின்று வரும் 3 மாணவிகள் காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று (அக்.26) பள்ளிக்குச் சென்ற 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் இன்னும் வீடு திரும்பவில்லை என்று இன்று பெற்றோர்கள் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செஞ்சி சிறுமியே இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையேயும், பெற்றோர் மத்தியிலும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
