CRIME
“பள்ளிக்கு போக மாட்டேன்…” பஸ் ஸ்டாண்டில் கதறி அழுத 10-ஆம் வகுப்பு மாணவன்… ஹாஸ்டல் வார்டன் செய்த காரியம்… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள டேவிட் பிஷப் என்ற தனியார் ஹாஸ்டலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தங்கி, அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்ற அந்தச் சிறுவன், விடுமுறை முடிந்த பின்னரும் பள்ளிக்குத் திரும்பாமல் இருந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், சிறுவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி வேலூர் பேருந்து நிலையத்தில் அந்தச் சிறுவன் மிகுந்த மனஉளைச்சலில் அழுதுகொண்டிருந்துள்ளான்.
அங்கு அழுதுகொண்டிருந்த சிறுவனைப் பார்த்த நபர் ஒருவர், அவனிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். அப்போது, தான் தங்கியிருந்த ஹாஸ்டலில் வார்டனாகப் பணியாற்றி வரும் நபர் தன்னிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாகச் சிறுவன் அழுதுகொண்டே தெரிவித்துள்ளான். இதைக் கேட்ட அந்த நபர் உடனடியாக சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் அளித்துள்ளார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் கிராமத்தைச் சேர்ந்தவரும், கடந்த 4 மாதங்களாக அந்த விடுதியில் வார்டனாகப் பணியாற்றி வருபவருமான இம்மானுவேல் (25) என்பவர், கடந்த 2 மாதங்களில் 4 முறை தன்னிடம் இதுபோன்ற பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சிறுவன் தெரிவித்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவன் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட வார்டன் இம்மானுவேலை சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
