CRIME
அடிப்பாவி..! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தை… மீன் குழம்பில் விஷம் வைத்து கொன்ற கொடூரம்..! பெற்ற மகளே செய்த பகீர் சம்பவம்..! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேலு என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், அவரது மனைவி முருகவள்ளி (45) சிக்கல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது முருகவள்ளிக்கும் அதே ஊரைச் சேர்ந்த இளையராஜா (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததை முருகவள்ளியின் தந்தை கருப்பையா (65) கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவள்ளி, தனது ஆண் நண்பர் இளையராஜாவுடன் சேர்ந்து தந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி 21.4.2018 அன்று இரவு முருகவள்ளி, தந்தை கருப்பையாவுக்கு மீன் குழம்பு சாப்பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட கருப்பையா ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து சிக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை முருகவள்ளி மீன் குழம்பில் விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து முருகவள்ளி மற்றும் இளையராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பாலமுருகன், குற்றவாளி முருகவள்ளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 1,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், இளையராஜாவுக்கு எதிராகப் போதிய சாட்சிகள் இல்லாததால் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் அருண்குமார் ஆஜரானார்.
