LATEST NEWS
“பணம் கேட்டால் ஜெயில்தான்..!” கூலி கேட்ட பாஜாக பிரமுகரை கெட்ட வார்த்தைகளால் திட்டி விரட்டியடித்தசப்-இன்ஸ்பெக்டர்.. சோஷியல் மீடியாவை உலுக்கும் நேரடி வாக்குமூலம் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் சௌபேபூர் காவல் நிலையத்தில், பாஜாக மாநில துணைத் தலைவர் என்று கூறிக்கொள்ளும் ரோஹன் குப்தா என்ற தொழிலதிபருக்கு நேர்ந்த அநீதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலி அமைப்பாளர் தொழில் செய்து வரும் ரோஹனை, கிருஷ்ண ஜெயந்திஅன்று சௌபேபூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பங்கஜ் மிஸ்ரா காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்திற்காக ஒலிபெருக்கி அமைக்குமாறு ரோஹனிடம் கூறப்பட்டுள்ளது. அதற்கு ரோஹன், வழக்கமாக 5,000 ரூபாய் வாங்குவதாகவும், காவல் நிலையம் என்பதால் 3,000 ரூபாய் கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பங்கஜ் மிஸ்ரா, “பணத்தைப் பற்றிப் பேசக் கூடாது, மரியாதையாக ஒலிபெருக்கியை அமைக்காவிட்டால் உன்னைச் சிறையில் அடைத்துவிடுவேன்” என ரோஹனை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன ரோஹன் அங்கு வேலை செய்துள்ளார். மறுநாள், தனது கூலிப் பணத்தைக் கேட்பதற்காக காவல் நிலையம் சென்ற ரோஹனை, ஒரு பைசா கூட தராமல் மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டி சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியடித்துள்ளார். தற்போது காவல்துறையினரின் அடிக்கு அஞ்சி காவல் நிலையம் செல்லவே பயந்து நடுங்கும் ரோஹன் குப்தா, தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு நீதி வேண்டும் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
