LATEST NEWS
“அய்யோ கொடுமையே… அடி-உதை… அப்புறம் பூச்சிக்கொல்லி மருந்து..! ரூ.50 லட்சம் சீர் கொடுத்தும் விடியாத வாழ்க்கை… வரதட்சணைப் பேய்க்கு பலியான இளம் பெண்… போலிஸ் அதிகாரியின் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்..!!
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உத்தர பிரதேச காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் மனோஜ் குமார் ராஜ்புத் என்பவரின் மனைவி சங்கீதா தேவி ராஜ்புத் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். சத்தர்பூரில் உள்ள மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை மற்றும் விஷம் வைத்துக் கொலை செய்ததாகக் கணவர் வீட்டார் மீது குற்றம் சாட்டி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குமாருக்கும், ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீதாவிற்கும் கடந்த 2024 ஜூலை 7 அன்று திருமணம் நடைபெற்றது.
சங்கீதாவின் பெற்றோர் வீட்டார் கூறுகையில், திருமணத்தின் போதே சுமார் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து திருமணம் நடத்தி வைத்ததாகவும், ஆனால் திருமணத்திற்குப் பிறகும் வரதட்சணை கேட்டு தனது மகளைக் கணவர் வீட்டார் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியும் சங்கீதா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தகவல் அறிந்து வந்த பெண்ணின் தந்தையும் சகோதரரும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சீராக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் செப்டம்பர் 7-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த சங்கீதா, உடனடியாகத் தனது பெற்றோர் வீட்டிற்கு போன் மூலம் தகவலைத் தெரிவித்துள்ளார். முதலில் நௌகாங்கில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நிலைமை மோசமானதால் சத்தர்பூர் மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொத்வாலி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
