LATEST NEWS
“குதிரை பேரம் நடத்தியது திமுகதான்” திமுக எம்.பி ஹோட்டலில் MLA க்களை தங்க வைத்தது யார்..? பின்னணியில் இருப்பது யார்..? ஆதாரத்தை வெளியிடுவதாக ஆதவ் அர்ஜுனா சவால்…!!
தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் மறுப்பு தெரிவித்துள்ளார். ஐயூஎம்எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா தனக்கு கோடிக்கணக்கில் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக சிலர் ஆதரவு கேட்டதாகக் கூறிய நிலையில், தவெக எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் தனிப்பட்ட முறையில் குதிரை பேரம் பேசவில்லை என்று ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜனநாயகப் பார்வையுடன் ஆட்சி அமைப்பதற்காகக் காங்கிரஸ், ஐயூஎம்எல் கேரளா தலைவர்கள், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்களுடன் மட்டுமே தவெக தரப்பில் அதிகாரப்பூர்வமாகப் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் எந்த எம்.எல்.ஏ-விடமும் பேச வேண்டிய அவசியம் தவெகவுக்கு எழவில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களில் தவறான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுகதான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய ஆதவ் அர்ஜுனா, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ஹோட்டலில்தான் ஐயூஎம்எல் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் சட்டசபையில் வெளியிட்டுள்ளார்.
ஐயூஎம்எல் எம்.எல்.ஏக்களை அந்த ஹோட்டலில் தங்க வைத்தது யார் என்பது குறித்தும், அதற்குப் பின்னால் இருந்து செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை முடிவில் உண்மைகள் அனைத்தும் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
