LATEST NEWS
“என் மகனை விட்டுவிடுங்கள்..!” நடுரோட்டில் கதறி துடிக்கும் தாய்.. பச்சிளம் குழந்தையைத் தூக்கிச் சென்ற முகமூடி நபர்கள்.. நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
மிசியோனெஸ் டி சான் பிரான்சிஸ்கோ தெருக்களில் தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் தாஸ்தான் சவாரியா மார்டினெஸ், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தையைத் தூக்கிச் சென்ற குற்றவாளிகளிடமிருந்து தனது மகனைப் மீட்க அந்தத் தாய் மரணப் போராட்டம் நடத்தியுள்ளார். கடத்தல்காரர்கள் குழந்தையுடன் காரில் தப்பியோட முயன்றபோது, அவர்களைத் தடுத்துத் தனது மகனை மீட்பதற்காக அந்தத் தாய் ஓடும் காரில் ஏறவும் துணிச்சலுடன் முயன்றுள்ளார்.
இருப்பினும், இரக்கமற்ற அந்தக் குற்றவாளிகள் அந்தத் தாயைக் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு, பதிவு எண் இல்லாத வாகனத்தில் சிறுவனுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். தற்பொழுது கடத்தப்பட்ட சிறுவனைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
